சனி, அக்டோபர் 08, 2011

அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைக்க நினைத்தால் ?


يُرِيدُونَ أَن يُطْفِؤُواْ نُورَ اللّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللّهُ إِلاَّ أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். 9:32.
 


(டென்மார்க் பத்திரிகை ஒன்றில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச் சித்திரம் வரைந்து பத்திரிகையில் வெளியிட்ட போது எழுதிய கட்டுரை)




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அறியாமை எனும் காரிருளில் சிக்கித் தவித்து கரை சேர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மனித சமுதாயத்திற்;கு அல்குர்ஆன் எனும் அணையாத ஒளியை ஏந்தி வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களை தீவிரவாதி போல் சித்தரித்து சித்திரம் வரைந்து மதவெறி தாகத்தை தனித்துக் கொண்டது டென்மார்க் பத்திரிக்கை நிருவனம் ஒன்று.

கிறுத்தவ டேனிஷ்களின் வரலாற்றைப் புரட்டினால் அர்களுக்கேத் தெரியும் யார் தீவிரவாதிகள் என்று.

இஸ்லாம் வந்த வேகத்தில் கிறுத்தவர் மதகுருமார்களின் புரோகிதத்தை ஒழித்துக்கட்டி  மக்களை அவர்களின் கோரப் பிடியிலிருந்து விடுவித்தது.

அவர்களின் கோரப் படியிலிருந்து விடுபட்ட மக்கள் புரோகிதம் இல்லாத இஸ்லாத்தை நோக்கி அணிவகுத்தனர். 

இதைக் கண்டு வெகுண்டெழுந்த கிறுத்தவ புரோகிதக் கூட்டம் முஸ்லிம்களை ழித்துக்கட்டி உலகம் முழுவதையும்> கிறித்தவத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சிலுவைப் போரைத் தொடங்கினார்கள்.

கண்மூடித் தனமானத் தாக்குதலை தொடுத்து சிறுபான்மை முஸ்லீம்களை அழித்தனர் ஆனால் இஸ்லாத்தை ஒழிக்க முடியவில்லை.

இயேசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பின் உலகை சொர்க்கபுரியாக்கி அதில் சுகமனுபவிப்பதற்காக (பவுல் என்பவர் இயேசு காலத்தில் வாழாதவர்) வேதத்தை மனம் போனப் போக்கில் எழுதினார்.  

ஆதமின் சந்ததிகள் அனைவருடைய பாவங்களையும் சிலுவையின் மூலம் இயேசு சுமந்து கொண்டார் எனும் கரடியை அதில் அவிழ்த்து விட்டு ஒட்டு மொத்த கிறித்தவ சமுதாயத்தையும் பாவத்தில் மூழ்கடித்து பாவிகளாக்கினார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்;வேறு வடிவில் இஸ்லாத்தை சீண்டுவதே அவர்களின் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

பல நேரங்களில் முஸ்லீம் பெயர் தாங்கிகளைக் கொண்டு சீண்டுவார்கள்> அதிலும் அவர்களுடைய திட்டம் நிறைவேறாமல் போனால் அதற்கடுத்து தாங்களே இஸ்லாத்திற்கு நன்மை செய்கிறோம் பேர்வழிகள் போல் களமிறங்குவார்கள் (முஹம்மது ஸல் அவர்களுக்கு சிலை வைக்க முற்பட்டது போன்றவைகள் உள்ளடங்கும்.).

சிலை வணக்கத்திற்கு உலகிலேயே முதன் முதலாக சாவு மணி அடித்தது இஸ்லாம் மட்டுமே என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  

நன்றாகத் தெரிந்திருந்தும் முஸ்லிம்களை சீண்டும் விதமாகவும் அல்லது ஒரு வேளை அது சில முஸ்லிம் பெயர் தாங்கி நாடுகளால்;; வரவேற்கப் பட்டுவிட்டால் அதன் மூலம் சிலை வணக்கத்தைப் புகுத்தி இஸ்லாத்தின் தனித் தன்மையை ( ஏகத்துவத்தை) சிதைத்து விட முடியும்.

இஸ்லாத்தின் ஏகத்துவம் சிதைந்து விட்டால் பிற மதங்களுடன் அது நிகராக தோன்றும் பொழுது மக்கள் அதன் பால் ஈர்க்கப்படுவதை விட்டும் தடுத்து விடலாம் என்றெண்ணி மிகப்பெரும் சதித் திட்டத்தை நிறைவேற்றம் முயற்சியில் இறங்கினார்கள். 

அதற்கு உலகம் முழுவதுமுள்ள முஸ்லீம்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதும் கை விட்டவர்கள் டென்மார்க் பத்திரிக்கை நிருவனத்தின் மூலம் சத்தியத்தூதர்(ஸல்) அவர்களை தீவிரவாதியாகவும், பெண் பித்தராகவும் சித்தரிக்கப்பட்டு சித்திரம் வரைய திட்டம் தீட்டி செயல் படுத்தினார்கள்.

கிறித்தவ முறையற்ற பாலியல் கலாச்சாரத்திற்கும், இஸ்லாமிய பாலியல் கலாச்சாரத்திற்கும் வித்தியாசமில்லை இரண்டும் ஒன்று தான் அதை அதன் தலைவரே பின்பற்றி உள்ளார் என்பதாக காட்டி அதை ஓரளவு மக்களை நம்ப வைத்து விட்டால் கிறுத்தவத்தை விட்டு வெளியேறும் மக்களைத் தடுத்து விடலாம் ன்றெண்ணி கேலிச்சித்திரம் வரைய டேனீஷியர்களை ஏவினர் சில டேனீஷியர்கள் சில சித்திரங்களை மனம் போன போக்கில் கிறுக்கினர்.

பிரசித்திப் பெற்ற ஒருவரைப் பற்றி கேலிச் சித்திரம் வரைவதாக இருந்தால் அவரைப் பற்றிய வரலாற்றை ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அண்ணல் அவர்களை கேலிச்சித்திரம் வரைந்த டேனீஷ்கள் எவருக்கும் அண்ணல் அவர்களைப் பற்றிய வரலாறு அறவேத் தெரியாது.
 
உலக முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் அதை பத்திரிக்கை சுதந்திரம் என்றுக் கூறி நழுவி விட்டனர். 

அவர்களின் கடவுளர்கள் மூவரையும் மனம் போனப் போக்கில் கேலிச்சித்தரம் வரைய முஸ்லீம்களுக்கு நேரம் அதிகமாகாது மூவரில் ஒருவர் பெண் என்பதால் இலகுவாக வரையலாம் ஆனாலும் உலக பெண்களில் முதன்மையானவர்  என்று அவரை இறைவன் சிறப்பித்துக் கூறுவதால் வரலாற்றைத் தெரிந்த முஸ்லீம்கள் இந்த ஈனச் செயலை செய்ய முன் வரவில்லை. கண்டனப் போராட்டங்கள மட்டும் முஸ்லீம்கள் நடத்தினர்.

இன்று உலகில் வல்லரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் தங்களது வல்லமையை இஸ்லாமிய நாட்டுப் பொருள் வளத்திலிருந்தே வளர்த்துக் கொண்டார்கள். இஸ்லாமிய அரபு நாடுகளில் வனிகம் என்கிற பெயரில் பெருக்கிக் (சுருட்டிக்) கொண்டார்கள்.
  
இவ்வாறு நம்மிடமிருந்து சுரண்டிக் கொண்டு நம்மையே மடையர்களாக நினைப்பார்களேயானால் நாமும் நம்மாலான சக்திக்கு தகுந்தவாறு எதையாவது செய்தேயாக வேண்டும். அதுவும் மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். 

உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் தடுக்கட்டும்> அதற்கு இயலாவிட்டால் தமது நாவால் தடுக்கட்டும்> அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் தடுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம.
 
மேற்கானும் நபிமொழி தீமையைக் கானும் பொழுது மூன்று நிலைகளில் எதிர்க்குமாறுக் கூறுகிறது> ஒன்று கையால் தடுப்பது> கையால் தடுக்கும் அளவு இன்று நாம் சக்தி பெற்றிருக்க வில்லை> இரண்டாவது நிலை வாயால் தடுக்க வேண்டும் மேற்படியார்களின் அடக்குமுறைகளை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்ய முடியாத அளவு சில நாடுகளில் குரல்வலைகள் நெறிக்கப் பட்டுள்ளதால் அதுவும் முடியாத நிலையாகி விட்டது> மூன்றாவது நிலைபாடு என்ன மாதிரியான நிலையிலும் முஸ்லீமுக்கு சாத்தியமானதேயாகும்.

நம்மால் முடிந்தளவு அவர்கள் நாட்டுத்  தயாரிப்புகளை வாங்குவதிலிருந்;து தவிர்த்துக் கொள்ள வேண்டும் இதை இஸ்லாமிய னைத்து நாடுகளும் ஒருமித்த முடிவுக்கு வந்திருப்பதால் நாமும் அதை பின்பற்றுவோம் இது தான் மூன்றாவதாகக்கூறும் பலவீனமான நிலையாகும் இதையாவது செய்தால் அரபுநாட்டுப் பொருளாதாரத்தில் வயிறு வளர்க்கும் டேனீஷயர்களுக்கு மிகப்பெரும் பாடமாக அமையும். 



 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

துமாமாவை மன்னித்த மாநபி (ஸல்) அவர்கள்.



وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ


107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு 281  அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம். 187


(டென்மார்க் பத்திரிகை ஒன்றில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச் சித்திரம் வரைந்து பத்திரிகையில் வெளியிட்ட போது எழுதிய கட்டுரை)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாற்று மதத்து எதிரிகள் தங்களிடம் வசமாக மாட்டிக் கொள்ளும் பொழுது சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்பவர்களே இன்று உலகில் மிகைத்திருப்பதை காண்கிறோம்.

ஆனால் அண்ணல் நபி(ஸல்)அவர்களிடம் மாட்டிக்கொண்ட இஸ்லாத்தின் பரம எதிரியாகிய துமாமா அவர்களிடம் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது ஒன்றே உலகம் முடியும் காலம் எவனும் தன்னுடைய வாழ் நாளில் தனது கைகளால் அண்ணல் அவர்களை கேலிச் சித்திரம் வரைய முன் வரவே மாட்டான்.

துமாமா அவர்கள் யமாமா பிரதேசத்தைச் சேர்ந்தவர் மதீனாவிலிருந்து வியாபாரம் நிமித்தம் அல்லது சொந்த அலுவல் நிமித்தம் யமாமா வழியாகவும் இன்னும் யமாமாவிலிருந்து சற்று தொலைவில் வேறு வழியாகவும் பயணிக்கக்கூடிய முஸ்லிம்களை கொலை செய்வதும், அவர்களது பொருட்களை சூறையாடுவதுமே அவரது வாடிக்கையாக இருந்து வந்தது அந்தளவு இஸ்லாத்தின் மீது பகையுணர்வு கொண்டவராக இருந்தார்.

இவர் ஒருநாள் மதீனாவிலிருந்து சற்று தொலைவில் பயணிக்கும் போது முஸ்லிம்களால் காணப்பட்டு மதீனாவுக்குள் பிடித்துக் கொண்டுவரப்பட்டு மஸ்ஜிதுன் நபவி பள்ளியில் கட்டப்பட்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு தகவல் அனுப்பப் படுகிறது.

அண்ணல் நபி  (ஸல்) அவர்கள்  துமாமாவின் அருகில் வந்து துமாமாவே இப்பொழுது உம்முடைய முடிவு என்ன ? என்று கேட்கிறார்கள்.
 
அதற்கவர்.
  • நீங்கள் விரும்பினால் என்னை கொலை செய்து விடலாம், காரணம் அதற்கு நான் முற்றிலும் தகுதியானவனே! அந்தளவுக்கு முஸ்லிம்களை நான் கொலை செய்திருக்கிறேன்.
  • நீங்கள் விரும்பினால் பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு என்னை விட்டு விடலாம் அந்தளவுக்கு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை (வியாபாரப் பொருட்களை) சூறையாடவும் செய்திருக்கிறேன்
  • நீங்கள் விரும்பினால் என்னை மண்ணித்து விடலாம் அவ்வாறு மண்ணித்து விட்டால் என்னை ஒரு சிறந்த மனிதராக நீங்கள் காணலாம். என்று அடக்கமாக கோரிக்கை வைக்கிறார்.  

இறைத்தூதர் என்பதற்கு சிறந்த சான்று 
கொலை செய்து விடுவதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்பதை அவரே ஒத்துக் கொள்கிறார் குற்றம் அவர் மூலமே நிரூபிக்கப்பட்டும் விடுகிறது அதனால் கொலைக்குக் கொலை எனும் ரீதியில் அவரை கொலை செய்ய உத்தரவிட்டிருக்கலாம். அல்லது பிணைத் தொகையை பெற்றுக் கொண்டாவது விடுவித்திருக்கலாம் காரணம் அப்பொழுது முஸ்லீம்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்பிணைத் தொகைத் தருவதாக அவரே ஒத்துக்கொண்டார். மண்ணித்து விட்டு விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய அவரது கோரிக்கையை புறக்கணித்திருக்கலாம் காரணம் விடுவித்தப் பிறகு சொன்ன மாதிரி சிறந்த மனிதனாக வாழ்வாரா ? என்பது உறுதியாக கூற முடியாது.

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் வழிகாட்டியாக வரவில்லை அனைத்து சமுதாய மக்களுக்கும் வழிக்காட்டியாக வந்தவர்கள் என்பதால் கொலை செய்வதையோ, பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்வதையோ தவிர்த்துவிட்டு துமாமா அவர்களது மூன்றாவது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நல்ல மனிதராக வாழ வழி விடுகிறார்கள். (முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.21: 107.  

அவரது கட்டுகள் அவிழ்த்து விடப்படுகிறது அண்ணல் அவர்கள் உண்மையிலேயே உலகத்தாருக்கு அருட்கொடையாக இறைவனால் அனுப்பபட்ட இறைத்தூதர் தான் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட துமாமா அவர்கள் அவ்விடத்தில் உளூ ( உடல் சுத்தம் ) செய்து விட்டு அண்ணல் அவர்களுடைய கரங்களின் மீது தனது கரங்களை வைத்து ஏகத்துவத்தை மொழிந்து முஸ்லிமாகி விடுகிறார்.

நான் இதற்கு முன் உங்களை வெறுத்ததுப் போன்று உலகில் எவரையும் வெறுத்ததில்லை,

இன்று உங்களை விட விருப்பத்திற்குரியவர் உலகில் இனி எவரும் எனக்கில்லை என்றுக் கூறி அண்ணல் அவர்களை ஆரத் தழுவிக் கொண்டார் துமாமா (ரலி) அவர்கள்.


தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தனது குடும்பத்தவர்கள் அனைவரையும் இஸ்லாத்திற்குள் இணைத்து விடுகிறார். 
குற்றம் சாட்டப்பட்டு எதிரியால் குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு கயிறுகளால் பிணைத்துக் கட்டப்பட்டு நிற்கும் ஒருவர் இஸ்லாத்தின் எதிரியாகவும் மாற்று மதத்தவராகவும் இருந்தும் கூட என்னை மண்ணித்து விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய உறுதி மொழியை ஏற்று அவரது குற்றங்களை மண்ணித்து அவரது கட்டுகளை அவிழ்த்து விட்டு விடும் படி உத்தரவிட்டதன் மூலம் அகிலத்தாருக்கு அருட்கொடையாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா ?   

அவர் தன்னை மண்ணித்து விடும்படி வைத்த மூன்றாவது கோரிக்கையில் சிறந்த மனிதராக வாழ்வேன் என்று மட்டுமேக் கூறினார் மாறாக அவிழ்த்து விடுங்கள் முஸ்லிமாகி விடுகிறேன் என்றுக் கூறவில்லை. 

இஸ்லாம் வாளால் பரவியது எனும் நச்சுக் கருத்துகளை விதைக்கும் மேற்கத்தியர்கள் முதல் இந்தியாவின் பாஷிச சிந்தனை வாதிகளும் தலைப்பாகையில் குண்டைக் கட்டி கேலிச் சித்திரம் வரைந்த டேனீஷ்கள் வரை மேற்கானும் துமாமா(ரலி) அவர்களுடைய வரலாற்றைப் படித்து தெளிவுபெற கடமைப் பட்டுள்ளனர்.

இஸ்லாத்திற்குள் கட்டாயப்படுத்தி எவரையும் உள்ளே நுழைவிப்பதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்கவில்லை இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிரிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். 2:256.

மேற்கானும் திருமறை வசனம் மூலம் இஸ்லாத்தை புரிந்துகொண்டு இஸ்லாத்திற்குள் வருவதை மட்டுமே இஸ்லாம் அங்கீகரிக்கிறது.

இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் நற்பண்புகளையும்அவர்கள் கொண்டு வந்த இறைமார்க்கத்தையும் புரிந்துகொள்ளாமல் இருந்தவரை முஸ்லிம்களை கொன்றொழிப்பதையும் அவர்களது பொருளாதாரத்தை சூறையாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்த துமாமா(ரலி) அவர்கள் அண்ணல் அவர்களுடைய மண்ணிக்கும் மனப்பான்மையை நேரில் பார்த்தப்பின் இதற்கு முன்பு தாம் தவறான சிந்தனையில் இருந்ததை உணர்ந்துகொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதுடன் தனது குடும்பாத்தாரையம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் செய்து இறைநம்பிக்கையாளர்களின் வரிசையில் இணைந்து கொண்டு ரலியல்லாஹூ அன்ஹூ என்கிற இறைப் பொறுத்தத்திற்குரிய பட்டத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள் 5:119. . . அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்'' என்று அல்லாஹ் கூறுவான்.

அண்ணல் அவர்களின் முழு சரித்திரத்தையம் படிக்க வில்லை என்றாலும் இந்த ஒரு சம்பவத்தையாவது கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் படித்திருந்தால் தலையில் குண்டைக் கட்டி சித்திரம் வரைந்திருப்பார்களா

ஹதீஸ் இடம்பெற்ற நூல்: அபூதாவூத், அறிவிப்பாளர்: அபூஹூரைiரா (ரலி)அவர்கள்.




 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கடன் காரர் இப்னு சனாவிடம் சகித்துக்கொண்ட சாந்த நபிகள் !!

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.21: 107.   

(டென்மார்க் பத்திரிகை ஒன்றில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச் சித்திரம் வரைந்து பத்திரிகையில் வெளியிட்ட போது எழுதிய கட்டுரை)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இதற்கு முன்பு துமாமா (ரலி) அவர்கள் நிராயுதபாணியாக முஸ்லிம்களிடம் சிக்கிக் கொண்டபொழுது அவர்களிடம் எப்படிப்பட்ட சகிப்புத் தன்மையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள் என்பதை சுருங்கப் பார்த்தோம்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது ஸைது இப்னு சனா என்கிற யூதர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுத்த கடனை திரும்பக் கேட்டு வருகிறார்.

அவ்வாறு வந்தவர் கடுமையான வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பிரயோகம் செய்கின்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய அருகில் அமர்ந்திருந்த அவர்களது ஆருயிர் தோழர்கள் கொதிப்படைந்து வாளை உருவிக்கொண்டு எழுகிறார்கள் அவ்வாறு எழுந்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விடுகிறார்கள்

தோழர்களே அவரைப் பேசவிடுங்கள் அவர் என்னைப் பேசுவதற்கு உரிமை பெற்றுள்ளார் நான் அவரிடம் கடன் பெற்றுள்ளேன் மேலும் அவருக்கு கடனை திருப்பிக்கொடுக்கும் தவனையையும் நான் மீறி விட்டேன் அதனால் உரிமையுடையவருக்கு அவருடைய உரிமையை விட்டு விடுங்கள் என்றுக் கூறி தமது தோழர்களை கட்டுப்படுத்தி விடுகின்றார்கள்.

அவ்வாறு தமது தோழர்களை கட்டுப்படுத்தி விட்டு இப்னு சனாவைப் பார்த்து இப்னுசனாவே இன்னும் நீங்கள் என்னை எவ்வளவு பேச வேண்டுமோ பேசிக் கொள்ளுங்கள் காரணம் உங்களிடம் நான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க நான் வாக்களித்த தவனை முடிந்து விட்டதால் நான் சகித்துக் கொள்கிறேன் என்றுக் கூறிவிடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இந்த பெருந்தன்மை இப்னு சனா அவர்களுக்கு நெகிழ்வை ஏற்படுத்துகிறது அதற்கு மேல் அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து திரும்பிச் சென்று விடுகிறார். 

அவ்வாறு திரும்பிச் சென்றவர் சிறிது நேரங்களிலெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருந்த அதே அவைக்கு தனது குடும்பத்தாருடன் வருகிறார் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களை நோக்கி தாமும் தமது குடும்பத்தினரும் இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாக கூறி இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார். . . .அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். அல்குர்ஆன் 5:119

இதற்கு முந்தைய வேதங்களில் இறுதி நபியுடைய வருகையைப் படித்துள்ளேன் அதில் இறுதி நபியிடம் அதிகமான சகிப்புத்தன்மையும், பொறுமையும் இருக்கும் என்று எழுதப்பட்டதை வாசித்திருக்கிறேன் அதை இந்த நபியிடம் சோதிப்பதற்காகவே அவ்வாறான கடுமைத் தனத்துடன் நடந்து கொண்டேன் முந்தைய வேதங்கள் கூறிய சகிப்புத் தன்மையும், பொறுமையும் இந்த நபியிடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவர் கொண்டு வந்த சத்திய மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் எனவும் கூறினார்.

இதைக்கேட்டு நபித்தோழர்கள் நெகிழ்ந்து போனார்கள் நபிகள் நாகயம் கையாண்ட பெருந்தன்மையை அவர்களது மறைவிறக்குப் பின் அவர்களும் தங்களுடைய ஆளுகையின் கீழுள்ள மக்களிடம் கையாண்டார்கள் அதனால் அவர்களிடத்திலும் அன்றைய வல்லரசுகள் மண்டியிட்டன.

மேற்கத்திய சமுதாயத்தவர்களே !!
இப்னு சனா அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகத்துடன் நடந்து கொண்டவிதம் அவர்களது அருகில் அமர்நதிருந்த தோழர்களுக்கு மாபெரும் ரோஷத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது ஏற்படுத்தத் தான் செய்யும் உங்களில் எவரும் தன்னுடைய தந்தை , தன்னுடைய மகன் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் நான் அவருக்கு அதிக விருப்பமானவனாக ஆகும் வரை இறை நம்பிக்கையாளராக முடியாது. என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய விலையை நிர்ணயிக்கக் கூடிய எந்தப் பொருளையும் விட தன்னைப் பெற்றெடுத்தவர்களையும் விட தன்னுடன் பிறந்தவர்களையும் விட நபிகள் நாயகத்தை உயிரிலும் மேலாக கருதியவர்களே அவ்விடத்தில் அமர்ந்திருந்தார்கள் அப்படிப்பட்டவர்களின் முன் சிறிய கடன் தொகைக்காக கடுமையான வார்த்தைகளைக் கொண்டு திட்டும்பொழுது கொதிப்படைந்த தனது தோழர்களை கட்டுப்படுத்தி விடுகிறார்கள் பொறுமை நபியவர்கள்.

நபியவர்கள் நினைத்திருந்தால் ஒரு கண் அசைவு போதும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அடித்து கொலுவில் தொங்க விட்டிருப்பார்கள் அத்துடன் எங்களை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கெதி என்று கூறியிருக்க முடியும் காரணம் இன்றிருப்பது போல் வல்லரசுகள் அன்றும் இருந்தன அந்த வல்லரசுகள் இவர்களுக்கு பயந்திருந்தார்கள் இன்றைய முஸ்லிம் நாடுகள் போல் அவர்கள் பீதியில் உறைந்திருக்கவில்லை.

இத்தனைப் பெரிய அதிகாரங்களை உடையவர்களுக்கு மத்தியில் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னந்தனியாக வந்து நபிகள் நாயகத்தை கடுமையான வார்த்தைகனைப் பேசும் போது அமைதி காத்த அந்த உத்தம நபியவர்களுடைய தலைப்பாகையில் குண்டுகளைக் கட்டி தீவிரவாதியாக சித்திரம் வரைந்து வெளியிட்டனர்.
செய்யாத குற்றத்திற்காக ஆப்கான் மக்களையும், ஈராக் மக்களையும், லெபனான் மக்களையும் கொன்று குவித்த ஜார்ஜ் புஷ் , டோனி பிளேர் தலைப்பாகையில் குண்டுகளைக் கட்டி தொங்க விட்டு முதல் பரிசை எப்பொழுது வெல்லப் போகிறீர்கள்.

வேதமுடையோரே! 27 உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கின்றீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள்? 3:71.


 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

உயிர்களை மதித்த உத்தம நபி.


وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِن كُلِّ مَثَلٍ وَلَئِن جِئْتَهُم بِآيَةٍ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ أَنتُمْ إِلَّا مُبْطِلُونَ {58}

30:58. இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் ''நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை'' என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை 13 வருடகாலம் செய்தார்கள் அப்பொழுது குறைஷி வம்சத்து இறைநிராகரிப்போர் நபிகளார் மீதும்> இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஏழை முஸ்லீம்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை மெற்கொண்டனர்> ஆனாலும் அவர்கள் குறைஷிகளை எதிர்த்து தாக்கவில்லை> இனியும் இங்கு வாழ முடியாது உயிருக்கு ஆபத்து எனும் நிலை ஏற்பட்டப் பின்னரே நாடு துறக்கும் முடிவுக்கு வந்தார்கள். 

நாடு துறந்து வேறொரு நாட்டுக்கு அகதிகளாய் தஞ்சம் புகுந்தார்கள் அங்கும் அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் குறைஷிகள் யுத்தம் செய்ய தயாரான போது தான் அவர்களை எதிர்தது போரிட முடிவு செய்கிறார்கள்.

13 வருடங்கள் பிறந்த நாட்டில் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் எதிர்த்து வாளேந்த வில்லை. 

வாளேந்தும் நிலை வந்து எதிரிகள் சாய்க்கப்பட்டு வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த பொழுதும் மனிதாபிமானத்தை இழக்கவில்லை சிந்தனையை தொலைத்து விட வில்லை. 

வாளேந்தி போர் புரிய முடியாத பெண்களையும்> குழந்தைகளையும் கொலலக் கூடாது என்று உத்தரவிட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள். என்று  இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 3015.

யுத்தத்தில் சரணடைபவர்களை கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்கள.

எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுரக்கா' கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர்> 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று சொல்ல> அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலம்க் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள்> 'உஸாமாவே! அவர்> 'லா இலாஹ இல்லல்லாஹ்'' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான்> '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று சொன்னேன். (ஆனால்> என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால்> நான்> '(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன். உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 4269
ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் பயணத்திலிருக்கும் போது தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றிட சென்று விட்டு திரும்பும் பொழுது தோழர்கள் இரு குருவி  குஞ்சுகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள் அவர்களுக்கு மேலே அவற்றின் தாய் குருவி நிம்மதியிழந்து தன் இரக்கைகளை விரித்து, தாழ்த்தி பறந்து வந்து தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு காருண்ய நபியவர்கள்  ''இதன் குஞ்சுகளை பறித்து இக்குருவியின் நிம்மதியைக் குலைத்தவர் யார்? அவற்றை அதனிடமே ஒப்படைத்து விடுங்கள்'' என்றுக் கடிந்து கொள்கிறார்கள் . அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு மஸ்வூத் நூல்: அபூதாவூது

ஒருமுறை நபித் தோழர்கள் எறும்புப்புற்று ஒன்றை எரித்து விடுகிறார்கள். இதனைப் பார்த்த நபியவர்கள் ''நெருப்பை படைத்தவனாகிய அல்லாஹ்வை தவிர வேறுயாரும் நெருப்பினால் வேதனை தருவது கூடாத செயலாகும்'' எனக்கடிந்து கொள்கிறார்கள்.
 
சின்னச்சிறு ஜீவராசிகளின் உயிர் விஷயத்தில் கூட தங்களுடைய கருனையை முடிந்த மட்டும் பொழிந்திருக்கிறார்கள் காருன்ய நபியவர்கள் என்றால் மனித உயிர்களின் மீது எவ்வாறு பரிவுடன் நடந்திருப்பார்கள் என்பதை அவர்களின் அப்பழுக்கற்ற வரலாற்றைப் படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள், அவர்களின் வரலாற்றை படிக்காதவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் பரிசை வெல்வதற்காக சித்திரம் வரைவார்கள்.

30:58. இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் ''நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை'' என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.

30:59. இவ்வாறே அறியாதவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

30:60. பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியாக நம்பாதோர் உம்மை இலேசாகக் கருதிட வேண்டாம்.

ஒரு ஈ, எறும்பைக் கொல்வதைக் கூட தடை செய்திருந்த சாந்தமே உருவான நமது உயிரிலும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களை ஒரு தீவிரவாதியாக கேலிச்சித்திரம் வரைந்த அறிவிலிகளின் நாட்டுத் தயாரிப்புகளை உள்ளத்தால் இன்று முதல் நம்மிடமிருந்து ஒதுக்கி விடுவோம் என்று உறுதி கொள்வோமாக !

தீவிரவாதிகள் என்று யாரும் தாமாக உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள் என்பதற்கு நபிகளாரை கேலிச்சித்திரம் வரைந்து முஸ்லீம்களை சீண்டியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்



 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்