சனி, அக்டோபர் 08, 2011

உயிர்களை மதித்த உத்தம நபி.


وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِن كُلِّ مَثَلٍ وَلَئِن جِئْتَهُم بِآيَةٍ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ أَنتُمْ إِلَّا مُبْطِلُونَ {58}

30:58. இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் ''நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை'' என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை 13 வருடகாலம் செய்தார்கள் அப்பொழுது குறைஷி வம்சத்து இறைநிராகரிப்போர் நபிகளார் மீதும்> இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஏழை முஸ்லீம்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை மெற்கொண்டனர்> ஆனாலும் அவர்கள் குறைஷிகளை எதிர்த்து தாக்கவில்லை> இனியும் இங்கு வாழ முடியாது உயிருக்கு ஆபத்து எனும் நிலை ஏற்பட்டப் பின்னரே நாடு துறக்கும் முடிவுக்கு வந்தார்கள். 

நாடு துறந்து வேறொரு நாட்டுக்கு அகதிகளாய் தஞ்சம் புகுந்தார்கள் அங்கும் அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் குறைஷிகள் யுத்தம் செய்ய தயாரான போது தான் அவர்களை எதிர்தது போரிட முடிவு செய்கிறார்கள்.

13 வருடங்கள் பிறந்த நாட்டில் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் எதிர்த்து வாளேந்த வில்லை. 

வாளேந்தும் நிலை வந்து எதிரிகள் சாய்க்கப்பட்டு வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த பொழுதும் மனிதாபிமானத்தை இழக்கவில்லை சிந்தனையை தொலைத்து விட வில்லை. 

வாளேந்தி போர் புரிய முடியாத பெண்களையும்> குழந்தைகளையும் கொலலக் கூடாது என்று உத்தரவிட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள். என்று  இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 3015.

யுத்தத்தில் சரணடைபவர்களை கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்கள.

எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுரக்கா' கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர்> 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று சொல்ல> அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலம்க் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள்> 'உஸாமாவே! அவர்> 'லா இலாஹ இல்லல்லாஹ்'' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான்> '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று சொன்னேன். (ஆனால்> என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால்> நான்> '(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன். உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 4269
ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் பயணத்திலிருக்கும் போது தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றிட சென்று விட்டு திரும்பும் பொழுது தோழர்கள் இரு குருவி  குஞ்சுகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள் அவர்களுக்கு மேலே அவற்றின் தாய் குருவி நிம்மதியிழந்து தன் இரக்கைகளை விரித்து, தாழ்த்தி பறந்து வந்து தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு காருண்ய நபியவர்கள்  ''இதன் குஞ்சுகளை பறித்து இக்குருவியின் நிம்மதியைக் குலைத்தவர் யார்? அவற்றை அதனிடமே ஒப்படைத்து விடுங்கள்'' என்றுக் கடிந்து கொள்கிறார்கள் . அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு மஸ்வூத் நூல்: அபூதாவூது

ஒருமுறை நபித் தோழர்கள் எறும்புப்புற்று ஒன்றை எரித்து விடுகிறார்கள். இதனைப் பார்த்த நபியவர்கள் ''நெருப்பை படைத்தவனாகிய அல்லாஹ்வை தவிர வேறுயாரும் நெருப்பினால் வேதனை தருவது கூடாத செயலாகும்'' எனக்கடிந்து கொள்கிறார்கள்.
 
சின்னச்சிறு ஜீவராசிகளின் உயிர் விஷயத்தில் கூட தங்களுடைய கருனையை முடிந்த மட்டும் பொழிந்திருக்கிறார்கள் காருன்ய நபியவர்கள் என்றால் மனித உயிர்களின் மீது எவ்வாறு பரிவுடன் நடந்திருப்பார்கள் என்பதை அவர்களின் அப்பழுக்கற்ற வரலாற்றைப் படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள், அவர்களின் வரலாற்றை படிக்காதவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் பரிசை வெல்வதற்காக சித்திரம் வரைவார்கள்.

30:58. இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் ''நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை'' என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.

30:59. இவ்வாறே அறியாதவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

30:60. பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியாக நம்பாதோர் உம்மை இலேசாகக் கருதிட வேண்டாம்.

ஒரு ஈ, எறும்பைக் கொல்வதைக் கூட தடை செய்திருந்த சாந்தமே உருவான நமது உயிரிலும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களை ஒரு தீவிரவாதியாக கேலிச்சித்திரம் வரைந்த அறிவிலிகளின் நாட்டுத் தயாரிப்புகளை உள்ளத்தால் இன்று முதல் நம்மிடமிருந்து ஒதுக்கி விடுவோம் என்று உறுதி கொள்வோமாக !

தீவிரவாதிகள் என்று யாரும் தாமாக உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள் என்பதற்கு நபிகளாரை கேலிச்சித்திரம் வரைந்து முஸ்லீம்களை சீண்டியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்



 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்