சனி, அக்டோபர் 08, 2011

கடன் காரர் இப்னு சனாவிடம் சகித்துக்கொண்ட சாந்த நபிகள் !!

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.21: 107.   

(டென்மார்க் பத்திரிகை ஒன்றில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச் சித்திரம் வரைந்து பத்திரிகையில் வெளியிட்ட போது எழுதிய கட்டுரை)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இதற்கு முன்பு துமாமா (ரலி) அவர்கள் நிராயுதபாணியாக முஸ்லிம்களிடம் சிக்கிக் கொண்டபொழுது அவர்களிடம் எப்படிப்பட்ட சகிப்புத் தன்மையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள் என்பதை சுருங்கப் பார்த்தோம்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது ஸைது இப்னு சனா என்கிற யூதர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுத்த கடனை திரும்பக் கேட்டு வருகிறார்.

அவ்வாறு வந்தவர் கடுமையான வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பிரயோகம் செய்கின்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய அருகில் அமர்ந்திருந்த அவர்களது ஆருயிர் தோழர்கள் கொதிப்படைந்து வாளை உருவிக்கொண்டு எழுகிறார்கள் அவ்வாறு எழுந்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விடுகிறார்கள்

தோழர்களே அவரைப் பேசவிடுங்கள் அவர் என்னைப் பேசுவதற்கு உரிமை பெற்றுள்ளார் நான் அவரிடம் கடன் பெற்றுள்ளேன் மேலும் அவருக்கு கடனை திருப்பிக்கொடுக்கும் தவனையையும் நான் மீறி விட்டேன் அதனால் உரிமையுடையவருக்கு அவருடைய உரிமையை விட்டு விடுங்கள் என்றுக் கூறி தமது தோழர்களை கட்டுப்படுத்தி விடுகின்றார்கள்.

அவ்வாறு தமது தோழர்களை கட்டுப்படுத்தி விட்டு இப்னு சனாவைப் பார்த்து இப்னுசனாவே இன்னும் நீங்கள் என்னை எவ்வளவு பேச வேண்டுமோ பேசிக் கொள்ளுங்கள் காரணம் உங்களிடம் நான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க நான் வாக்களித்த தவனை முடிந்து விட்டதால் நான் சகித்துக் கொள்கிறேன் என்றுக் கூறிவிடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இந்த பெருந்தன்மை இப்னு சனா அவர்களுக்கு நெகிழ்வை ஏற்படுத்துகிறது அதற்கு மேல் அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து திரும்பிச் சென்று விடுகிறார். 

அவ்வாறு திரும்பிச் சென்றவர் சிறிது நேரங்களிலெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருந்த அதே அவைக்கு தனது குடும்பத்தாருடன் வருகிறார் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களை நோக்கி தாமும் தமது குடும்பத்தினரும் இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாக கூறி இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார். . . .அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். அல்குர்ஆன் 5:119

இதற்கு முந்தைய வேதங்களில் இறுதி நபியுடைய வருகையைப் படித்துள்ளேன் அதில் இறுதி நபியிடம் அதிகமான சகிப்புத்தன்மையும், பொறுமையும் இருக்கும் என்று எழுதப்பட்டதை வாசித்திருக்கிறேன் அதை இந்த நபியிடம் சோதிப்பதற்காகவே அவ்வாறான கடுமைத் தனத்துடன் நடந்து கொண்டேன் முந்தைய வேதங்கள் கூறிய சகிப்புத் தன்மையும், பொறுமையும் இந்த நபியிடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவர் கொண்டு வந்த சத்திய மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் எனவும் கூறினார்.

இதைக்கேட்டு நபித்தோழர்கள் நெகிழ்ந்து போனார்கள் நபிகள் நாகயம் கையாண்ட பெருந்தன்மையை அவர்களது மறைவிறக்குப் பின் அவர்களும் தங்களுடைய ஆளுகையின் கீழுள்ள மக்களிடம் கையாண்டார்கள் அதனால் அவர்களிடத்திலும் அன்றைய வல்லரசுகள் மண்டியிட்டன.

மேற்கத்திய சமுதாயத்தவர்களே !!
இப்னு சனா அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகத்துடன் நடந்து கொண்டவிதம் அவர்களது அருகில் அமர்நதிருந்த தோழர்களுக்கு மாபெரும் ரோஷத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது ஏற்படுத்தத் தான் செய்யும் உங்களில் எவரும் தன்னுடைய தந்தை , தன்னுடைய மகன் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் நான் அவருக்கு அதிக விருப்பமானவனாக ஆகும் வரை இறை நம்பிக்கையாளராக முடியாது. என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய விலையை நிர்ணயிக்கக் கூடிய எந்தப் பொருளையும் விட தன்னைப் பெற்றெடுத்தவர்களையும் விட தன்னுடன் பிறந்தவர்களையும் விட நபிகள் நாயகத்தை உயிரிலும் மேலாக கருதியவர்களே அவ்விடத்தில் அமர்ந்திருந்தார்கள் அப்படிப்பட்டவர்களின் முன் சிறிய கடன் தொகைக்காக கடுமையான வார்த்தைகளைக் கொண்டு திட்டும்பொழுது கொதிப்படைந்த தனது தோழர்களை கட்டுப்படுத்தி விடுகிறார்கள் பொறுமை நபியவர்கள்.

நபியவர்கள் நினைத்திருந்தால் ஒரு கண் அசைவு போதும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அடித்து கொலுவில் தொங்க விட்டிருப்பார்கள் அத்துடன் எங்களை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கெதி என்று கூறியிருக்க முடியும் காரணம் இன்றிருப்பது போல் வல்லரசுகள் அன்றும் இருந்தன அந்த வல்லரசுகள் இவர்களுக்கு பயந்திருந்தார்கள் இன்றைய முஸ்லிம் நாடுகள் போல் அவர்கள் பீதியில் உறைந்திருக்கவில்லை.

இத்தனைப் பெரிய அதிகாரங்களை உடையவர்களுக்கு மத்தியில் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னந்தனியாக வந்து நபிகள் நாயகத்தை கடுமையான வார்த்தைகனைப் பேசும் போது அமைதி காத்த அந்த உத்தம நபியவர்களுடைய தலைப்பாகையில் குண்டுகளைக் கட்டி தீவிரவாதியாக சித்திரம் வரைந்து வெளியிட்டனர்.
செய்யாத குற்றத்திற்காக ஆப்கான் மக்களையும், ஈராக் மக்களையும், லெபனான் மக்களையும் கொன்று குவித்த ஜார்ஜ் புஷ் , டோனி பிளேர் தலைப்பாகையில் குண்டுகளைக் கட்டி தொங்க விட்டு முதல் பரிசை எப்பொழுது வெல்லப் போகிறீர்கள்.

வேதமுடையோரே! 27 உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கின்றீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள்? 3:71.


 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்